கொரானோ ஊரடங்கு சமயத்தில் பல பேர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். மேலும் வறுமையில் வாடும் பலருக்கு அரசும் தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டை பாதுகாக்கும் பணியில் மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் கடைமையோடு செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டை காப்பாற்றும் பணியின் போது தன் உயிரை இழந்த திரு. சந்தசேகரின் குடும்பத்தினருக்கு தமிழ் நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அவரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறி, அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், உடனடியாக ரூ.20 லட்சம் மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்காவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.