சென்னை மருத்துவ கல்லூரியின் தலைமை செவிலியர் திருமதி பிரிசிலா சமீபத்தில் காலமானார். இவருக்கு குரானா தொற்று உள்ளதா இல்லையா என்பதில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு கொரனோ இல்லை என்று மேலும் அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்றும் மருத்துவமனை தலைவர் ஜெயந்தி தெரிவித்தார். மேலும் அவர் உடல் அஞ்சலிக்காக பொது வெளியிலும் வைத்தார்.

பிரிசில்லா வின் உடல் அஞ்சலியின் போது அங்கு வந்த அவரது தம்பி ஆண்ட்ரூஸ் அவரது சகோதரி க்கு குரானா பாசிட்டிவ் என்று எழுதப்பட்டிருந்த ஆவணங்களை காண்பித்தார்.மேலும் அவருக்கு குரானா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.
இதுகுறித்து மருத்துவமனை தலைவர் ஜெயந்தியிடம் கேட்டபோது வீட்டில் யாராவது தவறாக எழுதி இருக்கலாம் ரிப்போர்ட்டில் கொரானோ நெகட்டிவ் என்று தான் வந்துள்ளது என்றும் கூறினார். இப்படி காவல்துறையினர், மருத்துவமனையை தலைவ,ர் உறவினர் என மாறி மாறி வரும் தகவல்களால் உண்மையில் எப்படி மரணம் ஏற்பட்டது என்று விஷயத்தில் குளறுபடி நீடிக்கின்றது. ஒரு செவிலியருக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்கள் நிலைமை என்ன ஆகுமோ.