நாடெங்கும் தலைவிரித்தாடும் கொரானாவை கட்டுப்படுத்த இந்திய அரசு பல வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. இந்நிலையில் ஸ்டேஜ் 3 யை கடந்துவிட்டதாக கருதப்படும் சென்னை மாநகரில் கொரானோ கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.
ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பாதிப்பிற்கு உள்ளாவதால் இதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது. கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் இந்நோய் தொற்று எப்படி வந்தது என கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் தலைமை செயலகத்தில் டிசாஸ்டர் ஸ்பெலிஸ்ட் என கருதப்படும் ராதாகிருஷ்ணன் அவர்களை நியமித்துள்ளது. இவர் தமிழ்நாட்டில் பல பேரிடர்கள் நடக்கும் போது இவர் தான் அதனை நிர்வகித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் சுனாமி, கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்து, வரதா புயல், சென்னை வெள்ளம் போன்றவற்றில் ஏற்படும் பொருளாதார பிரச்சனைகளை இவர் தீர்வு சிறந்த முறையில் கையாண்டுள்ளார். மேலும் ஜெயலிதாவின் மறைவிற்கு பிறகு இவர் தான் அந்த நேரத்தில் ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார்.
-*
+இவர் சென்னை கொரானோ தீர்வு பணிக்கு நியமிக்கப்பட்டதன் மூலம் சென்னை கொரானோ கட்டுக்குள் வரப்படும் என்று நம்பப்படுகிறது. இதுவரை பல பிரச்சனைகளை சந்தித்த தலைநகர் சென்னை இந்த பிரச்சனையும் சமாளித்து மீண்டு வரவேண்டும்.