Saturday, May 4, 2024
-- Advertisement--

நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்…!!!

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்து உள்ளது. அந்த தொகையை இரண்டு வாரத்திற்குள் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என பரபரப்பு உத்தரவை வெளியிட்டுள்ளது.


நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றினை இறக்குமதி செய்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் தான் இறக்குமதி செய்து இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார்.

இன்று அந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அதில் விஜய் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சமூகநீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்கள் ஆக இருக்கக் கூடாது. மேலும் வரி என்பது அனைவருக்கும் பொதுவானதே கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். அதேபோல் நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் இரண்டு வாரத்தில் அபராத தொகையை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று காலஅவகாசம் கொடுத்துள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles