குரானா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் அது மிகவும் கோரத்தாண்டவம் ஆடியது. இதுகுறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிகவும் கட்டுப்பாடு மிக்க மாவட்டமாக கருதப்பட்டன. அங்கிருந்து யாரும் வரவும், மற்றவர்கள் அந்த மாவட்டங்களிலிருந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்திலும் சென்னையிலும் தொற்று அதிகரித்து வருவதாக கூறப்பட்டாலும், அண்மையில் சென்னையில் அதிகரிக்கவில்லை என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். சென்னையில் ஆரம்பத்தில் 1000 முதல் 2000 வரை மட்டுமே சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் தற்போது 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரை சோதனை நடத்தப்படுகிறது இதை வைத்து பார்க்கும் பொழுது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட வேண்டும் , ஆனால் இரண்டாயிரத்திற்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனினும், சென்னையில் 1834 பெயர்க்கும் குறைவாக தான் பாதிக்கப்பட்டுள்ளனர்
பரிசோதனையை அதிகரித்தால் அதிக அளவு தொற்று உள்ளவர்கள் கண்டுபிடிக்க படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது. தமிழகத்தில் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பு விகிதத்தை பார்க்கும்பொழுது பரிசோதனை அதிகரித்தாலும் நோயாளிகள் அதிகரிக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் தற்போது தினமும் 50-க்கும் குறைவானவர்களே பலியாகி வருகின்றனர்.

பரிசோதிக்க படாத இடங்களில்கூட நோயாளிகள் இருந்திருந்தால் பலி எண்ணிக்கை கூடுதலாக இருந்திருக்கக்கூடும். அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில் போன்று அதிகமாக இருக்கக்கூடும். ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை பலி எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. மேலும் தமிழகத்தில் குணமாகி வரும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருவது ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இதுவரை 40 ஆயிரம் பேர் தமிழகத்தில் கிருமித் தொற்றில் இருந்து விடுபட்டு குணமாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை வைத்து பார்க்கும்பொழுது சென்னை மற்றும் தமிழகம் விரைவில் இந்த கிருமி தொற்றில் இருந்து விடுபடும் என்று நம்பிக்கை அனைவர் மனதிலும் எழுகிறது,