தற்போதயெல்லாம் வங்கி கணக்கு வைத்திருந்தாலே காசு கிடைத்து விடுகின்றது போல.
நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு சில படமான ஸ்கேம் 1996 மட்டும் ஸ்கேம் 2003 படத்தைப் போலவே மக்கள் அனைவரது வங்கி கணக்கு தொகையையும் ஒரு தனி நபருக்கோ அல்லது ஒரு தனி வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பணம் போய் சேருவது வாடிக்கையாகிவிட்டது.
அப்படி ஒரு சம்பவம் தற்சமயம் கோடம்பாக்கத்தில் நிகழ்ந்துள்ளது. கார் ஓட்டுநரான ராஜ்குமார் அவர்களுக்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வழியாக 9000 கோடி அவரது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இதை யாரோ ஒருவர் தன்னை ஏமாற்றுவதற்காக போடப்பட்டிருக்கும் பணம் என்று நினைத்து அதில் 21,000 ரொக்கத்தை மட்டும் தனது நண்பர் ஒருவருக்கு வங்கி மூலமாகவே அனுப்பியுள்ளார்.

இதை கண்டறிந்த வங்கிய ஊழியர்கள் மீதமிருந்த பணத்தை கணக்கிலிருந்து எடுத்தது மட்டுமல்லாமல் மீதி பணத்தையும் வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
மாற்றப்பட்ட அந்த 21000 தொகையை அவரது வாகன கடனுக்காக வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்கள். இதுபோன்ற அஜாக்கிரதையாக உள்ள வங்கிகளை சட்டங்கள் கொண்டு வந்து மாற்ற வேண்டும்.
வாடகை கார் ஓட்டுநர் வங்கிக் கணக்கில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திடீரென டெபாசிட் ஆன சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.