Wednesday, May 8, 2024
-- Advertisement--

நடிகர் விஜயுடன் 12 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் பிரபலம் ?ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த காம்போ ரெடி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தளபதி விஜய். தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முட்டபொம்மா புகழ் பூஜா ஹட்டே நடிக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்திருந்தார்கள். ஆனால் விஜய் திட்டவட்டமாக பீஸ்ட் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என கூறிவிட்டாராம்.

அதனால் தயாரிப்பு நிறுவனம் விஜய்யின் விருப்பப்படி பொங்கலுக்கு படத்தை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்து விஜய் நடிக்க இருக்கும் 66வது படம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு தில் ராஜு தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாக அவரை சமீபத்தில் வெளியிட்ட பேட்டி ஒன்றில் அறிவித்திருந்தார். பிரகாஷ்ராஜ் அந்தப் பேட்டியில் ரஜினியுடன் நடித்து வருகிறேன், சூர்யாவுடன் நடித்து வருகிறேன், விஜயுடன் நடிக்க உள்ளேன் என கூறியிருந்தார். இதன்மூலம் விஜய்யின் அடுத்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பது உறுதியாக தெரிகிறது. மேலும் பிரகாஷ்ராஜ் பேட்டியை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஏற்கனவே விஜய், பிரகாஷ்ராஜ் காம்போ ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இருவரும் நடித்த கில்லி, போக்கிரி, ஆதி, சிவகாசி உள்ளிட்ட படங்கள் இன்றளவும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இருவரும் இறுதியாக கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘வில்லு’ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த பிரகாஷ்ராஜ் 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles