Wednesday, May 8, 2024
-- Advertisement--

பிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு பிரபல நடிகருடன் விரைவில் திருமணம்…!!! பிரபல நடிகர் யார் தெரியுமா..?

நடிகை நிக்கி கல்ராணி ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் ஜீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நிக்கி. டார்லிங் படத்தில் பேய் பிடித்த பெண்ணாக அவர் அடிக்கும் லூட்டிகள் மக்களைக் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த நிக்கி யாகவராயினும் நாகாக்க என்ற படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கொஞ்சம் நியாயமான சம்பளம் வாங்கும் நிக்கிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது.

மோசமான கிளாமர் காட்சிகள் வேண்டாம் என்று கோரிக்கையும் வைத்துவிடுகிறாராம் ஆரம்பத்திலேயே. ஹர ஹர மஹாதேவகி என்ற படத்தில் நடித்திருந்தது தொடர்ந்து சுந்தர் சி யின் கலகலப்பு 2 படத்தில் நடித்திருந்தார். பிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின் 2 என்ற படத்தில் நடித்திருந்தார் நிக்கி அந்தப் படத்தில் இடம்பெற்ற செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடிய சின்ன மச்சான் பாடல் மாபெரும் ஹிட்டானது.

சமீபத்தில் நடிகர் ஆதிக்கும் நிக்கி கல்ராணிக்கும் காதல் என்றும், ஆதி வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கு நிக்கி கலந்து கொள்வதும், நிக்கி கல்ராணி வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஆதி கலந்து கொள்வதும் செய்தியாக வெளிவந்தது. அதுமட்டுமல்லாமல் ஆதியும் நிக்கியும் ஒன்றாக வெளிநாடு சென்று விட்டு ஏர்போர்ட் வந்தபோது புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டனர் ஒரு சிலர்.

இந்த நிகழ்ச்சியில் இரு குடுப்பதினாரும் விரைவில் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். விரைவில் இவர்களுடைய திருமணம் குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles