Thursday, May 2, 2024
-- Advertisement--

மாலையுடன் திருமண நாளை கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்..!!! கேப்டனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.

கேப்டன் விஜயகாந்த் இவர் நல்ல நடிகர் என்று தான் அனைவருக்கும் தெரியும். விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து அவர்கள் மட்டுமே கூறுவார்கள் விஜயகாந்த் அவர்கள் தங்கமான மனிதர் என்று. நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த்.

மிக எளிமையாக தனது ரசிகர்கள் வீட்டுக்கு சென்று உணவு சாப்பிடுவாராம். ரசிகர்களை தன் குடும்பம் போல் நினைத்த விஜயகாந்த் எப்போது எங்கு பார்த்தாலும் அவரது ரசிகர்களுக்கு மரியாதை கொடுக்கவே தவற மாட்டாராம். தன் ரசிகர்களின் திருமணத்தை சத்தமில்லாமல் நடத்தியும் வைத்திருக்கிறார் விஜயகாந்த்.

சமீப காலமாக விஜயகாந்த் அவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வெளிநாடுகள் சென்று மருத்துவம் பார்த்து வந்த விஜயகாந்த் சமீபத்தில் கூட மியாட் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தார்.

விஜயகாந்தின் கம்பீரமான குரல் இன்று இல்லை என்றாலும் கேப்டன் நலமுடன் இருந்தாலே போதும் என்று அவரது ரசிகர்கள் அன்புக் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் என்ற பெயரில் அவரை சிரமப்படுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இன்று விஜயகாந்த் அவர்கள் திருமண நாளையொட்டி தனது குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles