Saturday, May 4, 2024
-- Advertisement--

அன்பு மகன் செல்பி எடுக்க சிரித்து கொண்டு போஸ் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்..!!! கேப்டன்னுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முதலில் நடிக்க வந்த பொழுது இவரை எப்படி ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறியவர்கள் மத்தியில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வரவில்லை என்று வேறொரு நடிகரை அவர் முன்னே நடிக்க வைத்தார்கள்.

பல அவமானங்கள், பல தடைகள் அனைத்தையும் தாண்டி பல வெற்றிகளை கண்ட மனிதர். நடிகர் சங்கத் தலைவராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். தளபதி விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு பெரிய அளவில் வெற்றி பெறாததால் அவருடைய தந்தை எஸ்ஏசி அவர்கள் விஜயகாந்திடம் கால் செய்து தம்பி விஜய் உடன் நீங்கள் ஒரு படம் நடித்தால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும், விஜய்க்கும் அது உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார். சற்றும் யோசிக்காத விஜயகாந்த் கண்டிப்பாக தம்பி விஜயுடன் நான் நடிக்கிறேன் என்று நடித்து வெளியான படம் தான் செந்தூரப்பாண்டி.

அரசியலில் இறங்கி மக்களுக்கு தொண்டு செய்ய நினைத்த விஜயகாந்த் முதலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அதன்பின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து சட்டசபையில் தனது கருத்துக்களை தைரியமாக பதிவு செய்தவர். எதிர்க்கட்சித் தலைவி அவர்களை எதிர்த்து விஜயகாந்த் பேசிய பேச்சு அனைவரும் அறிந்ததே. அந்த அளவிற்கு தனக்கு சரி என்றால் அமைதியாகவும் தனக்கு தவறாக தெரிந்தால் ஆக்ரோஷமாகவும் வெளிப்படையாக தனது கருத்தினை தெரிவிப்பவர்.

சிங்கம் போல இருந்த விஜயகாந்த் சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் தனது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர் அவரது மகன்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles