பல பழக்க வழக்கங்களை ஜோதிடம் வாயிலாக நாம் அனைவரும் நம்பி வருகிறோம். நாம் போகும் பாதையில் கீழே பணம் விழுந்து இருந்தால் அதை எடுக்கலாமா வேணாமா என்பது குறித்து ஜோதிடம் என்ன கூறுகிறது தெரியுமா.?
பொதுவாக கீழே பணம் கிடைத்தால் ஒரு சிலர் அதை உடனே எடுத்துக் கொள்வர், சிலர் அதை கண்டு கொள்ளாமல் செல்வர். ஜோதிடத்தின் பார்வையில் எப்பொழுதுமே பணம் லஷ்மி தேவியின் அதிபதியாகவே கருதப்படுகிறது.

அதன்படி பணம் கீழே கிடப்பது சில அறிகுறிகள், சில நல்லது சில கெட்டது நமக்கு நடக்கும். அது ஜோதிடத்தில் எவ்வாறு கூறப்படுகிறது என்று ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது பணம் இருப்பது, வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது பணம் கீழே கிடப்பது என இரு வகையாக உள்ளது.

வீட்டில் இருந்து கிளம்பும்போது பணம் கீழே கிடந்தால் அதை எடுத்துக் கொள்ள வேண்டும், அது நம்முடையது இல்லை என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பணத்தை அலுவலக செலவுக்காகவோ அல்லது கோயிலில் உண்டியலில் போட்டு விட வேண்டும்.
இதற்கு மாறாக வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பொழுது பணம் கீழே கிடந்தால் அதை உடனடியாக எடுத்து அது நம்முடையது என்ற எண்ணத்தோடு எடுக்காமல் அது நமக்கானது என்ற எண்ணத்தோடு எடுத்து அந்த பணத்தை எடுத்து ஒரு டைரியிலோ அல்லது ஒரு சிறிய பையிலோ போட்டு வைக்க வேண்டும்.

ஆனால் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் அது நாம் சம்பாதித்த பணம் இல்லை என்பது மட்டும். வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது படம் கீழே கிடப்பது அவ்வளவு நல்லது இல்லை, ஏனெனில் வீண் விரயங்கள் அதிகரிக்கும் என்பதற்கான அறிகுறியாகவே ஜோதிடத்தில் கருதப்படுகிறது.
பெரும்பாலான ஜோதிடத்தில் பணம் லட்சுமியின் அதிபதியாக இருப்பதினால் படம் கீழே கிடப்பது ஒரு விதத்தில் நல்லது தான்.