Saturday, May 4, 2024
-- Advertisement--

இந்திய அளவில் ரஜினி படத்தையே முந்திய விஜய் படம்..!!! BOOK MY SHOW வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்.

BOOK MY SHOW இந்திய அளவில் எந்த ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனாலும் இணையம் வழியாக அதிக அளவில் டிக்கெட் புக் செய்வது இந்த இணையதளத்தில் தான்.

வாடிக்கையாளர்கள் இணையத்தை பயன்படுத்தி இந்த இணையதளம் மூலமாக தனக்குப் பிடித்த திரையரங்கில் தனக்கு பிடித்த இடத்தை புக் செய்துவிட்டு தியேட்டருக்கு படம் பார்க்கச் செல்வார்கள். QUEUEவில் நின்று டிக்கெட் வாங்க முடியாமல் தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த இணையதளம் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.

தற்பொழுது BOOK MY SHOW நிறுவனம் 2021 ஆம் ஆண்டு ரெக்கார்ட் வைத்த திரைப்படங்களில் லிஸ்ட் வெளியிட்டுள்ளது அதாவது 2021 ஆம் ஆண்டு வெளியாகி மக்களால் அதிகம் தேடப்பட்ட படங்களும் மக்களால் அதிகம் பேசப்பட்ட படங்களும் மற்றும் மக்கள் அதிகமாக விரும்பி புக் செய்த படங்களில் லிஸ்ட்டை தற்போது இந்திய அளவில் வெளியிட்டுள்ளது.

மக்களால் அதிகம் டிக்கெட் புக் செய்யப்பட்ட படத்தின் லிஸ்டை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள் அதில் முதல் இடத்தில் சூரியவன்ஷி என்ற ஹிந்தி படம் இருந்தது அதற்கு அடுத்த இடத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்ததால் மாஸ்டர் படத்துக்கு இரண்டாவது இடத்தை கொடுத்துள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து ஆறாவது இடத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இடம்பெற்றுள்ளது எட்டாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணாத்தே திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்திய அளவில் வெளியிடப்பட்ட லிஸ்டில் விஜய், சிவகார்த்திகேயன், ரஜினி படங்கள் இடம் பெற்றிருப்பது ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இரண்டாவது இடத்தில் இருப்பது விஜய் ரசிகர் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களுக்கும் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

இந்த பட்டியல் படி பார்க்கையில் ரஜினியை விஜய் முந்தி உள்ளது ரசிகர்களிடம் பெரும் ஆச்சிர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles