கர்நாடக இசைக் கலைஞரும் பாடகியமான பாம்பே ஜெயஸ்ரீ மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். இந்த நிலையில் ஹோட்டலில் தங்கி இருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி உள்ளார்.
தற்போது சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதோடு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
அதோடு அவருடைய உடல்நிலை சற்று ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது திரையுலையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.