Sunday, May 19, 2024
-- Advertisement--

நேற்று இரவு பிரபல திரையரங்கில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கு அடி உதையா….? டென்ஷன் ஆன முகத்துடன் ப்ளூ சட்டை மாறன் வெளியான புகைப்படம்.

ப்ளூ சட்டை மாறன் தமிழ் சினிமா விமர்சகர்களின் இவரும் ஒருவர். எந்த திரைப்படம் வெளியானாலும் அதனை பார்த்து விமர்சனம் செய்யும் இவர் படத்தில் உள்ள குறைகளை மட்டும் சொல்லாமல் படமெடுத்த இயக்குனரையும் நடிகரையும் தொடர்ந்து தனது விமர்சன வீடியோவில் கேலி செய்து வந்தார்.

இவருடைய வீடியோக்களை பார்த்து ரசிகர்களும் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து வந்தார்கள். எந்த திரைப்படம் வெளியானாலும் ப்ளூ சட்டை மாறன் அவர்களின் விமர்சனம் பார்த்து விட்டு செல்வார்கள் ரசிகர்கள். அந்த அளவிற்கு பிரபலமான மாறன் அவர்கள் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படத்தை பார்த்துவிட்டு படத்தை இயக்கிய வினோத் அவர்களையும் படத்தில் ஹீரோவாக நடித்த அஜீத் குமாரை உருவ கேலி செய்து விமர்சனம் செய்திருந்தார்.

குறிப்பாக அஜித்தின் தோற்றம் பற்றி ப்ளூ சட்டை மாறன் கிண்டலடித்து பேசியிருந்தார். திரைப்படத்தை விமர்சனம் செய்வது தவறல்ல ஆனால் ஒருவர் கேலி செய்து விமர்சனம் செய்வது கண்டிக்கக் கூடியது என்று பல தரப்பிலிருந்து இவருக்கு எதிர்ப்புகள் வந்தது.

ப்ளூ சட்டை மாறன் அஜித் ரசிகர்களை தொடர்ந்து கிண்டல் செய்து பதிவு செய்து வந்தார். அதுமட்டுமல்லாமல் தானே இயக்கி நடித்த ஆன்ட்டி இந்தியன் படத்திற்கு பிரபல பத்திரிக்கை கொடுத்த மார்க்கை அஜித் படங்களோடு ஒப்பிட்டு பதிவு செய்து வந்தார். ஆன்ட்டி இந்தியன் படத்திற்கு அந்த பத்திரிக்கை 44 மதிப்பெண் கொடுத்திருக்கிறார்கள் அதனை வைத்துக்கொண்டு அஜித்தின் முந்தைய படங்களின் மதிப்பெண்ணை ஒப்பிட்டு கலாய்த்து வந்தார். ப்ளூ சட்டை மாறன் மீது செம டென்ஷனில் இருந்தார்கள் அஜித் ரசிகர்கள்.

இந்நிலையில் நேற்று ப்ளூ சட்டை மாறன் அவர்கள் PVR திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றபோது இரவு நேரத்தில் அவருக்கு அடி உதை விழுந்ததாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளிவந்தது சில புகைப்படங்களும் வெளியானது அதில்மாறன் அவர்கள் அதிர்ச்சியில் நிற்பது போல இருந்தது இதனை பார்த்த ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் அவர்களிடம் PVRல அடி பலமாக விழுந்து இருக்குமோ என்று கேட்டு வந்தனர்.

உண்மையில் என்ன நடந்தது என்பதை மாறன் தற்பொழுது பதிவிட்டு உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles