Thursday, May 2, 2024
-- Advertisement--

டாஸ்மாக் கடைகள் திறப்பு..!!! ஸ்டாலின் போட்ட வேஷம் இது தான் விடியலா உங்கள் அண்ணனிடம் கேளுங்கள் கனிமொழியிடம் கூறிய வானதி சீனிவாசன்.

கோவை தெற்கு பகுதியில் பாஜக வேட்பாளராக நின்றவர் தான் வானதி சீனிவாசன். சட்டமன்ற தேர்தலில் இவருக்கும் கமல்ஹாசனுக்கும் அந்த தொகுதியில் பெரிய போட்டி நிலவியது.

முதலில் கமலஹாசன் தான் ஜெயிக்க போகிறார் அவர்தான் முன்னிலையில் நிற்கிறார் செய்திகள் வந்து கொண்டிருந்தபோது இரவு 8 மணி அளவில் வானதி சீனிவாசன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இரவு நேரமாகியும் வானதி சீனிவாசனா கமலா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் பெரிய அளவில் இருந்தது.

சிலர் வானதி சீனிவாசன் அவர்கள் வந்தால் பாஜக தமிழகத்திற்குள் நுழைந்து விடும் அதற்கு கமலே வரலாம் என்று கருத்துக்களை பதிவிட தொடங்கினர். கடைசியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடும் போட்டிக்கு இடையே வானதி சீனிவாசன் அவர்கள் ஜெயித்தார்.

நேற்று வருகின்ற 14ஆம் தேதி 21 ம் தேதி வரை ஊரடங்கை அறிவித்து அதில் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு. அந்த தளர்வுகளில் டாஸ்மார்க் திறக்க அனுமதி வழங்கியிருந்தது அரசு. அதற்கு குஷ்பு மற்றும் அதிமுக தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வானதி சீனிவாசன் அவர்களும் ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்று ஆயிரக்கணக்கில் இறப்பு நூற்றுக்கணக்கில் டாஸ்மாக் திறப்பு அவசியமா ஒரு வருடத்தில் ஸ்டாலின் அவர்கள் போட்ட வேஷம் மாறியதோ, ஒலித்த கோஷம் மறந்ததோ இதுதான் விடியலா என்று கேட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அதிமுக ஆட்சியில் இருந்தபொழுது மக்களைப் பற்றி சிந்திக்காமல் மதுக்கடைகளை பற்றி சிந்திக்கும் எடப்பாடி அரசுக்கு எதிர்ப்புகளை தெரிவித்த கனிமொழியிடம் இப்போது அண்ணனிடம் என்ன எப்படி கேட்பீர்கள் என்று கேள்வியும் கேட்டு உள்ளார் வானதி சீனிவாசன்.

புதுச்சேரியில் உங்கள் கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது அங்க மது ஆறு போல் ஓடுதே வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles