Friday, May 17, 2024
-- Advertisement--

பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் மகன் சென்ற கார் கவிழ்த்து கோர விபத்து…!!!

வானதி சீனிவாசன் அவர்களின் மகன் பயணித்த கார் சேலம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்களுக்கு ஆதர்ஷ், கைலாஷ் என்ற 2 மகள்கள் உள்ளனர். அதில் ஆதர்ஸ் வயது 23 கோவையில் நடந்த உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகண்டு நேற்று இரவு சென்னைக்கு தனியாக காரில் பயணித்துள்ளார்.

அப்பொழுது சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள மேம்பாலத்தில் வளைவில் உள்ள தடுப்புச்சுவர் மீது ஆதர்ஷ் கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தை தெரிந்துகொண்டார் சேலம் மாவட்ட பாஜகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதிர்ஷ்டவசமாக பெரிய காயங்கள் எதுவுமின்றி விபத்தில் இருந்து தப்பித்தார்.

அதன்பின் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனை செய்தபின் வேறு ஒர காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.கார் கடுமையாக சேதம் அடைந்து இருந்தது. அந்த காரை அன்னதானப்பட்டி போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles