Wednesday, May 1, 2024
-- Advertisement--

மாணவி லாவண்யா குடும்பத்தினருக்கு தமிழக அரசு 1 கோடி தர வேண்டும்- ஹ ராஜா.

தஞ்சாவூர் அருகே ஐந்தாம் வகுப்பு மாணவி லாவண்யா அவர்கள் மத மாற்றம் செய்யக்கோரி விடுதி வார்டன் கட்டாய படுத்துவதாகும் மதம் மாறவில்லை என்பதால் வற்புறுத்தி வந்ததாகவும் லாவண்யா என்ற சிறுமி விஷ மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை சில நாட்களாகவே ஏற்படுத்தியுள்ளது.

லாவண்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த மாணவி மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அது மட்டுமல்லாமல் பல தரப்பிலிருந்து விசாரணையை பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து வந்தார்கள். இந்நிலையில் மாணவி தங்கியிருந்த விடுதி வார்டன் சகாயமேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 15ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவி 19ஆம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ததோடு தஞ்சையில் சாலை மறியலும் செய்தனர். நேற்றுதான் லாவண்யாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு அஞ்சலிக்கு அவரது ஊரில் வைக்கப்பட்டது பாஜக தேசிய பொது குழு உறுப்பினர் ஹ ராஜா மாநில தலைவர் கருப்பு முருகானந்தம் என்று பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஹ ராஜா அவர்கள் மதமாற மறுத்ததால் கழிவறை கழுவ கடுமையான பணிகள் செய்ய உததரவிடப்பட்டு துன்புறுத்தலின் காரணமாக தற்கொலைக்கு ஆளான லாவண்யாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமிழக அரசு அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles