கரோனா ஊராட்ங்கு கொஞ்சம் கொஞ்சமாக பொது மக்களின் வாழ்கை நிலைக்காக தகர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழமெங்கும் மக்கள் இயல்பு நிலைக்கு வந்தது போல நடமாட ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக சென்னையில் தான் கரோனா தாக்கம் அதிகம் என்பதால் பிற மாவட்டங்களுக்கு ஊடங்களில் ஒரு சில கட்டுப்பாடுகளை வைத்து கொஞ்சம் கொஞ்சமாய் தளர்த்தி வருகிறார்கள்.
கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட சென்னையில் மக்கள் அடிக்கடி வெளியில் வருவதும், இருசக்கர வாகனங்களில் செல்வது என்று வெளியில் சுற்றி வருகிறார்கள். வெளியில் வரும் பொழுது முகக்கவஸ்தை அணியாமல் வருவதால் கரோனா தோற்று அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது என்று முகக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்க முடிவு செய்தது சென்னை மாநகராட்சி.
சென்னை காவல்துறை ஆணையர் திரு ஏ கே விஸ்வநாதன் அவர்கள் இன்று அபராத தொகையை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். சென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து வருபவருக்கு 100 ரூபாய் அபராதமும், இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வருபவருக்கு 500 அபராதமும் இன்று முதல் வசூலிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். மேலும் கரோனா பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் அயராது பணி செய்து வருகின்றனர். மக்கள் தான் அனைவர்க்கும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.