Friday, May 10, 2024
-- Advertisement--

கையில் வோட்காவுடன் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஷிவானி…!!! கலக்கல் புகைப்படங்கள்.

ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடரில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் ரசிகர்களிடம் பிரபலமானார்.

பகல் நிலவு சீரியல் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்து வந்தார். சிவானி திடீரென்று சில காரணங்களால் அந்த சீரியலை விட்டு வெளியேறியதாக தகவல் வெளிவந்தது.

அதன்பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார். இதில் சிவானி அக்கா, தங்கை என இரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரெட்டை ரோஜா சீரியலில் சில எபிசோட் தான் நடித்து வந்த ஷிவானி திடீரென்று எந்த ஒரு காரணமும் சொல்லாமல் அந்த சீரியலை விட்டு வெளியேறினார்.

அதன்பின் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலத்தை அடைந்தார். அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் சிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோடு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கையில் வோட்காவுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். சிவானி புதிதாக வாங்கிய நாயின் பெயர்தான் வோட்கா சிவானி கையில் நாயுடன் உள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles