Friday, May 3, 2024
-- Advertisement--

“கடமை தவறாதவன்” என மீண்டும் நிரூபித்து காட்டிய நடிகர் கமல்ஹாசன்…!!! இன்றைய பிக்பாஸ் முதல் ப்ரோமோவில் வரும் கமல்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஐந்து சீசன்கள் ஆக கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்க இருப்பதாகவும் இந்நிலையில் கமலஹாசன் அவர்கள் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவை விட்டு திரும்பி இந்தியா வந்த பின் லேசாக இருமல் இருந்து உள்ளது. அதன் பின் பரிசோதனை செய்து கொண்ட கமலஹாசன் தொற்று இருப்பது உறுதியானது.

மேலும் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் இன்று காலை கமலஹாசன் பூரண உடல் நலத்துடன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். மேலும் டிஸ்சார்ஜ் ஆன உடனே நேராக ஈவிபி பிலிம் சிட்டிக்கு சென்றார். அதனால் சென்ற வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

இந்தவாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்கிய முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. நடிகர் கமலஹாசன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி “கடமை தவறாதவர்” என்று நிரூபித்து காட்டியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles