Friday, May 3, 2024
-- Advertisement--

ஐந்தே நாட்களில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நிறுத்தம்…!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று உள்ள நிகழ்ச்சி பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதற்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

அதோடு பிக்பாஸ் சீசன் 5 முடிந்த கையோடு பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தின் மூலம் ரசிகர்கள் 24 மணி நேரமும் காணலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் 14 பேரை தேர்ந்தெடுத்து களமிறங்கியுள்ளனர்.

அதோடு தொடங்கிய சில நாட்களிலேயே பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணி பங்கேற்றுள்ளனர். அதேபோல் இரண்டாவது சீசனில் இருந்து சாரிக் மற்றும் தாடி பாலாஜி, மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி மற்றும் அனிதா, நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி, 5 வது சீசனில் இருந்து தாமரைச்செல்வி, சுருதி, நிருப் மற்றும் அபிநய் ஆகிய பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரடியாக நிகழ்ச்சியை காண முடியும். இதனை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம். மேலும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி தொடங்கி ஐந்து நாட்கள் கடந்து உள்ளது.

ஆனால் தினமும் சண்டைக்கு பஞ்சமில்லாமல் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாட்களாக தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று திடீரென லைவ் ஸ்ட்ரீமிங் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே பிரீ ரெக்காடர்ட்டு ஷோ என்றால் எப்படி தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு வேலை பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் இடையே ஏதேனும் பிரச்சனை வந்ததால் நிறுத்தப்பட்டு உள்ளதா என கேள்வி எழுந்து உள்ளது. இதற்கு கூடிய விரைவில் பிக்பாஸ் குழுவிடமிருந்து விளக்கம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles