Friday, May 3, 2024
-- Advertisement--

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற பாரத் பந்த் படுதோல்வி – கே.அண்ணாமலை.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற எதிர்க்கட்சிகள் போராட்டம் தமிழகத்தில் படுதோல்வி அடைந்ததாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: விவசாயிகளுக்கு நன்மை தருகிற விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றம் வகையிலான மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

அந்த நிலையில் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்களை எதிர்த்து ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர். ஆனால் தமிழக அரசின் போராட்டம் படு தோல்வி அடைந்ததோடு சில அரசியல் கட்சிகளைத் தவிர வேறு எந்த விவசாயிகளும் போராட்டத்தில் சாலையில் இறங்கி வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட தயாராக இல்லை.

ஆகையால் பிரதமரின் விவசாயிகளுக்கான பல திட்டங்கள் பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 நிதி உள்ளிட்ட பல திட்டங்கள் விவசாயிகளின் மேன்மைக்காக செயல்பட்டு வருகிறது. அதோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் விவசாயிகளிடம் நம்பிக்கையை இழந்து விட்டார்.

இதன் மூலம் தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக விவசாயிகளின் வாழ்வில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழக அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வியாபாரிகளுக்கான மாற்றி தொழில் முனைவோருக்கான மாற்றம் தமிழக முதல்வர் வேளாண் சட்டங்களை புறக்கணிக்கும் வகையில் விவசாயிகளின் இன்றைய நிலைக்கு என்ன தீர்வு தரப்போகிறார் என்பதை வெள்ளை அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles