Saturday, May 4, 2024
-- Advertisement--

செஞ்சுரி அடித்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு.. மாஸ் லுக்கில் தளபதி விஜய்.. ஆடிப் பாடி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்ட நெல்சன்…!!!

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 100 நாள் எட்டியுள்ளதால் படக்குழுவினர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி உள்ளனர்,அப்போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் டிலிப்குமர் இயக்கி வரும் திரைப்படம் பீஸ்ட். தளபதி விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஜோடியாக பூஜா ஹண்டே நடிக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அதோடு இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் விஜய் துப்பாக்கி படத்தை போல் இதிலும் ராணுவ அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று திரைப்படம் வெளியாகும் என படக்குழு திட்டமிட்டு உள்ளது.

மேலும் பீஸ்ட் திரைப் படத்தின் ஷூட்டிங் தொடங்கி 100 நாட்களுக்கு மேல் தொடர்வதை படப்பிடிப்பு குழு ஆடிப் பாடி கொண்டாடி வருகின்றனர். மேலும் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் விஜய் ஸ்டைலிஷான லுக்கில் டிரம்ஸ் உடன் உள்ள புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜயின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை கண்ட மகிழ்ச்சியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles