Saturday, May 4, 2024
-- Advertisement--

செல்பி எடுக்க வந்த ரசிகரால் கடுப்பான பீஸ்ட் நடிகை வைரலாகும் வீடியோ!!!

பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவிற்கு முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அவர் அறிமுகமான முதல் படமே பெரிய அளவிற்கு வெற்றி பெறாததால் தமிழில் பிரபல ஆக முடியாமல் போன பூஜா தெலுங்கு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.

தெலுங்குவில் அம்மணி காட்டும் தாராளத்திற்கு தெலுங்கு திரையுலகில் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்பொழுது முன்னணி ஹீரோயின்கள் திருமணம் ஆகி சென்றதாலும் பாலிவுட் பக்கம் திசை திரும்புவதால் வரண்டு போன தெலுங்கு சினிமாவிற்கு பூஜா கொஞ்சம் ஆறுதலாக இருந்தார்.

கவர்ச்சிக்கு மறுக்காமல் ஓகே சொல்வதால் பல தயாரிப்பாளர்கள் அவர்களது படத்தில் பூஜாவை நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வந்தனர். இவர் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடித்த ஒரு படத்தில் புட்ட பொம்மா என்ற பாடல் மாபெரும் வெற்றியை பெற்று பெரிய பிரபலத்தை தேடிக் கொடுத்தது.

அந்த நேரத்தில் தமிழில் தளபதி விஜய்யை வைத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் படத்திற்கு ஹீரோயின் தேடி வந்தார்கள். விஜயுடன் முன்னணி கதாநாயகிகள் தொடர்ச்சியாக நடித்ததால் ஏற்கனவே நடித்த ஹீரோயின்கள் இல்லாமல் பிரெஷ் ஹீரோயின் ஒருவரை தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்த படக்குழு பூஜாவை தேர்வு செய்தார்கள்.

தற்பொழுது தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறப்பான முறையில் படப்பிடிப்பு முடிந்து ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தில் அரபிக் குத்து மற்றும் ஜாலிஓ ஜிம்கானா பாடல் வெளியாகி பட்டிதொட்டி முழுவதும் பரவி மாபெரும் ஹிட் அடித்தது.

இந்நிலையில் உடற்பயிற்சி செய்துவிட்டு வெளியில் வந்தபோது பூஜாவிடம் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க கேட்டு மீண்டும் மீண்டும் எடுத்து பூஜாவை சங்கடத்திற்கு உள்ளாகினார். ஆகையால் அங்கிருந்த மற்ற கேமரா மேன்கள் ரசிகரை திட்டி விரட்டினர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

credits : Shudh Manoranjan

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles