Saturday, May 18, 2024
-- Advertisement--

பிரபல இயக்குனருடன் வெளிநாட்டில் DON பட நாயகி பிரியங்கா மோகன்…!!! வெளியான புகைப்படம் என்ன விஷயம் தெரியுமா..!!!

பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

டாக்டர் படத்திற்கு பிரியங்காவை சிபாரிசு செய்ததே சிவகார்த்திகேயன் தானாம் . தெலுங்கில் படு பிசியாக நடித்துக்கொண்டிருந்த பிரியங்கா புகைப்படத்தை இயக்குனருக்கு அனுப்பி இந்தப் பெண்ணை டாக்டர் படத்துக்கு ஹீரோயினாக தமிழுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று கூறியிருக்கிறார். அதன்பின் பிரியங்காவை அணுகி டாக்டர் படத்தின் கதையை சொல்லி தமிழில் நடிக்க வைத்தார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் ரசிகர்கள் அனைவரையும் தனது எதார்த்தமான நடிப்பால் கவர்ந்தார். டாக்டர் படத்திற்கு பிறகு அம்மணிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் தமிழில் அடுக்கடுக்காக குவிந்தது.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். டாக்டர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் மீண்டும் DON திரைப்படத்தில் நடித்திருந்தார். டான் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பிரியங்கா நடித்த படங்கள் தமிழில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்று வருவதால் பிரியங்காவை ராசியான கதாநாயகி என்று கோலிவுட் வட்டாரத்தில் முடிவு செய்துவிட்டனர் தொடர்ந்து அவருக்கு கதைகளை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் டாக்டர் பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்களுடன் பிரியங்கா மோகனுடன் வெளிநாடு சுற்றி வருகின்றனர். ப்ரியங்கா மோகனுடன் நடிகர் கவின், இயக்குனர் நெல்சன் நடிகர் வைபவ் அவர்களின் அண்ணன் சுனில் ஷெட்டி ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர்.

ஒரு வேலை thalaivar 169 டீம்மா இருக்குமோ என்று குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles