தளபதி விஜய் நடித்து சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்த திரைப்படம் தான் பீஸ்ட் இந்தப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தை எடுத்த நெல்சன் திலீப்குமார் அவர்கள்தான் எடுத்திருந்தார். விஜய் படம் என்றாலே சுமாராக இருந்தாலே நல்ல வரவேற்பு இருக்கும் காரணம் விஜயின் கமர்சியல் பார்முலா தான் விஜய் படத்தில் நல்ல பாடல்கள், சண்டைக் காட்சிகள், மாஸ் சீன்கள், காமெடி காட்சிகள் அனைத்தும் இருக்கும்.
விஜய்யின் கமர்ஷியல் பார்முலா தான் இதுவரை விஜய்க்கு பெரிய மாஸ் ஹீரோ அந்தஸ்தை மேன்மேலும் உயர்த்தியதுக்கு காரணம் ரஜினிக்கு பிறகு விஜய்க்கு குடும்ப ரசிகர்கள் அதிகம் இருப்பதால் படமெடுக்கும் இயக்குனர்கள் விஜயின் பார்முலாவை வைத்துக் கொண்டு தான் அதில் தனது கதையை கூறி வருகின்றனர்.
நெல்சன் பீஸ்ட் படத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பாடல் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் விஜயை மாஸாக காட்டுவதிலும் கவனமாக இருந்த நெல்சன் திரைக்கதையை சுவாரசியமாக சொல்லாததால் பீஸ்ட் பலருக்கு சலிப்பை தந்தது.
விஜய் ரசிகர்களே நெல்சன் ஏன் இப்படி படம் எடுத்து வைத்திருக்கிறார் என்று வருத்தத்துடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள். பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை முதல் நாளே சந்தித்தது. படம் நன்றாக இல்லை என்று விமர்சனங்கள் வெளிவந்த பிறகும் விஜயின் திரைப்படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்தார்கள் அவருடைய குடும்ப ரசிகர்கள்.
இதற்கிடையில் பீஸ்ட் தோல்விப்படம் என்று சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வந்தனர். பல விமர்சகர்கள் பீஸ்ட் படம் சரியில்லை என்றாலும் நல்ல வசூல் செய்துள்ளது கண்டிப்பாக தோல்வி படம் கிடையாது என்று விவாதித்து வந்தனர்.
இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பற்றி உதயநிதி அவர்கள் தொடர்ந்து யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து வந்தார் அப்பொழுது நெறியாளர் ஒருவர் பீஸ்ட் சரியாய் போகல என்கிறார்களே என்று கேட்க பீஸ்ட் படம் தோல்வி என்று சிலர் சொல்றாங்க. பீஸ்ட் கமர்சியல் ஹிட் படம். நல்ல வசூல் செய்தது ஒரு வாரத்திலேயே நல்ல கலெக்சன் செய்தது. எவ்வளவு வசூல் செய்தது என்பது அந்த படத்தை ரிலீஸ் செய்த எனக்கும் சன்பிக்சர்ஸ்க்கும் நன்றாக தெரியும். தளபதி விஜயின் பீஸ்ட் வெற்றிப் படமே என்று கூறியுள்ளார் உதயநிதி.