கோடம்பாக்கத்தில் கார் ஓட்டுனராக வேலை பார்க்கும் ராஜ்குமார் அவர்களுக்கு திடீரென்று அவரது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக் கணக்கில் 9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது.
இதனை துளிகூட நம்பாத ராஜ்குமார் அவர்கள் யாரோ தன்னை ஏமாற்றுவதற்காக செய்துள்ள வேலை இது என்று நம்பி அதில் இருக்கும் 21,000 ரொக்கத்தை மட்டும் தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார்.
இதை கண்டறிந்த வங்கி ஊழியர்கள் மீதமிருந்த பணம் முழுவதையும் அவர் வங்கி கணக்கிலிருந்து எடுத்துள்ளார்கள்.
மாற்றப்பட்ட 21 ஆயிரம் ரொக்கத்தை முதலில் அவருக்கு கார் லோனுக்காக வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய வங்கி நிறுவனம் பின்னர் அதை திரும்ப பெறுவதற்காக ராஜ்குமார் அவர்களை மிரட்டி உள்ளார்கள்.
இதை சிறிதளவும் எதிர்பாக்காத ராஜ்குமார் அவர்கள் மிரண்டுள்ளார். அவர் தன் சகோதரனுடன் முதலில் கோடம்பாக்கத்தில் இருக்கும் வங்கிக்கு சென்றுள்ளார். அவர்கள் இவர் கொடுக்க வேண்டிய 21,000 மட்டும் கேட்டு உள்ளார்கள், ஆனால் அவர்கள் ஏன் அந்த ஒன்பதாயிரம் கோடியை போட்டார்கள் என்பதன் விவரத்தை ஒரு விவரமும் குறிப்பிடவில்லை.
இதில் மற்றொருவர் போன் கால் செய்து தான் தலைமையிலிருந்து பேசுவதாகவும் அந்த 21,000 ரொக்கத்தையும் அவருக்கு கடனாக அளித்ததாகவும் அதை எப்போது வேண்டுமானாலும் திருப்பிக் கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.
ராஜ்குமார்க்கு மீண்டும் 11,000 டெபாசிட் செய்யப்பட்ட நிலையில் அவர் மறுபடியும் வங்கியை அணுகியுள்ளார். அதற்கு மீண்டும் அந்த வங்கி ஊழியர் அவர் எப்போது தான் அந்த 21,000-த்தை செலுத்தப் போகிறார் என்பதை மீண்டும் மீண்டும் கேட்டுள்ளார்.
ராஜ்குமாரை நச்சரிக்கும் வங்கி ஊழியர்கள் ஏன் அவர்கள் அந்த 9000 கோடியை போட்டார்கள் என்பதை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. தவறுதலாக அந்த தொகை உங்களுக்கு வந்துவிட்டது என்று கூறுகிறார்களாம்.
இதனால் பாதிப்படைந்துள்ள ராஜ்குமார் அவர்கள் 10 நாளாக வேலைக்கு செல்லாததால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவருடைய மன உளைச்சலுக்கு காரணமான தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தான் இதற்கு பொறுப்பேற்று அவருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்து.