கொரனோ வறுமையால் வாடும் தமிழக மக்களுக்கு தமிழக அரசும் தன் நாடுகளும் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். அரசும் சலுகைகளையும் தன்னுடைய நிவாரண உதவிகளையும் மக்களுக்கு கொடுத்து வருகின்றது.
அந்த வகையில் தற்போது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தலா 50,000 வரை கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
மதுரை மாடக்குளம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்தார். அப்போது முதல்வர் பழனிசாமி உத்தரவின் படி கூட்டுறவு வங்கிகளில் ரேஷன் கார்டு மட்டும் இருந்தால் போதும் கூட்டுறவு வங்கிகளில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ரூ 50,000 வரை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். என்று அவர் கூறியுள்ளார்.