Sunday, May 19, 2024
-- Advertisement--

நடிகை நமிதாவிற்கு கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு விழா…!!! புகைப்படங்கள் இதோ.

நமிதா முதலில் அருண் ஐஸ் கிரீம், மாணிக் சந்த் குட்கா போன்ற விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் சினிமாவிற்கு விஜயகாந்தின் எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின் ஏய் என்ற படம் இவருக்கு பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தது.

குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்ற அர்ஜுனா அர்ஜுனா என்ற பாடல் மூலம் நமிதா பல இளைஞர்களின் மனதை பதம் பார்த்தார். நமிதாவிற்காக கோயமுத்தூரில் கோவிலும் கட்டினார்கள். அதுபோல நமிதாவையே திருச்சியில் கடத்தினார்கள் அவரது ரசிகர்கள்.

நமிதா கட்டுக்கோப்பான உடல் வாகை வைத்திருந்ததால் உயரமாக இருப்பதினாலும் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது.

அதன்பின் வீரேந்திர சவுத்ரி என்ற தொழிலதிபரை 2017 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்ட நமிதா நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்.

தற்போது நமிதா சில படங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்நிலையில் நடிகை நமீதா சமீபத்தில் கர்ப்பமாக உள்ள செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

இதனை அறிந்த ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்போது நடிகை நமிதாவிற்கு வளைகாப்பு நடைபெற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles