பிரபல இயக்குனரும் நடிகருமான ஜி.எம்.குமார் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாலா இயக்கிய “அவன் இவன்” படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜி.எம்.குமார். நடிகர் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி பேனர் அடித்து அதனுடன் புகைப்படத்தை எடுத்து பகிர்ந்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில் ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை என குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களிடம் இருந்து நகைச்சுவையான கருத்துக்களை பெற்று வருகிறது.

பாரதிராஜா இயக்கத்தில் “கேப்டன் மகள்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தொட்டி ஜெயா, வெயில் மலைக்கோட்டை, குருவி, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

அவன் இவன் படத்திற்கு பின் அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் அந்த படத்தில் நடிப்பின் மூலம் அனைவரது நினைவிலும் வைத்துக்கொள்ள காரணமாக இருக்கிறது.
ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை🤣 pic.twitter.com/w3EFA8JNTV
— G.M. Kumar (@gmkhighness) March 21, 2023