அதுல்யா ரவி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த கியூட்டான நடிகை. மிக குறுகிய காலத்திலே நிறைய ரசிகர்களை கவர்ந்தவர். இவருடைய ஹோம்லியான முக தோற்றம் இவருடைய பெரிய பிளஸ். “காதல் கண் கட்டுதே” என்ற படத்தில் அறிமுகம் ஆன அதுல்யா “ஏமாளி”, “சுட்டு பிடிக்க உத்தரவு” போன்ற படங்களில் நடித்தார். “கேப்மாரி” என்ற படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்தார். அதன் பின் “அடுத்த சட்டை ” என்ற அருமையான படத்தில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடித்த அதுல்யா “நாடோடிகள் 2 ” படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதுல்யா சில நாட்களுக்கு முன் தனது தந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வந்தது. அந்த வீடியோவில் அதுல்யா தனது தந்தையுடன் செல்லமாக விளையாடினர். இவளோ பாசமா தந்தை மீது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
தற்பொழுது தனது அன்பு சகோதரரின் மீது உப்புமூட்டை ஏறிய புகைப்படங்களை வெளியிட்டு தனது தம்பி பிறந்தநாள் அன்று வாழ்த்தி இருந்தார்.

