Saturday, May 18, 2024
-- Advertisement--

தனது அன்பு மகளுக்கு கதகளி கற்று கொடுக்கும் பிரபல நடிகை அசின்..!!! அம்மாவை போல செம கியூட்.

பிரபல நடிகை அசின் தமிழில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே யார் இந்த கேரள வரவு என்று ரசிகர்களை உற்றுநோக்க வைத்த அசின் அதனை தொடர்ந்து உள்ளம் கேட்குமே என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி என்ற படத்தில் கல்பனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். அசினின் நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழில் இருக்க அசின் தளபதி விஜயுடன் சிவகாசி என்ற படத்தில் ஜோடி சேர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து தல அஜித்துடன் வரலாறு, ஆழ்வார் என்ற படத்தில் நடித்த அசின் மறுபடியும் தளபதி விஜய் உடன் போக்கிரி படத்தில் ஜோடி சேர்ந்தார்.

விஜய் அசின் ஜோடி நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது. அசினின் கடைசி தமிழ் படமாக விஜய்யின் காவலன் படம் அமைந்தது. ஏற்கனவே மலையாளத்தில் பெரிய ஹிட்டான திலீப், நயன்தாரா நடித்த பாடிகார்ட் என்ற படத்தை தமிழில் காவலன் என்று ரீமேக் செய்து விஜய் நடித்து இருந்தார். நயன்தாரா கதாபாத்திரத்தில் அசின் நடித்து இருந்தார். அந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

தமிழில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இந்திக்கு சென்ற அசின் அங்கு கஜினி ரீமேக்கில் அமீர்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் ஹவுஸ்ஃபுல் 2 , போல் பச்சன் கில்லாடி 786 , ஆல் இஸ் வெல் போன்ற படங்களில் நடித்த அசின் 2016 ஆம் ஆண்டு படிப்பை நிறுத்திவிட்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இருவருக்கும் அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது அந்த பெண்ணுக்கு ஆரின் என்று பெயர் வைத்துள்ளனர் மூன்று வயதை தொட்ட அசின் மகள் தற்பொழுது அம்மா அசினிடம் கதகளி கற்றுவருகிறார். அந்த கியூட் புகைப்படத்தை அசின் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles