Saturday, May 4, 2024
-- Advertisement--

கர்ப்பகாலத்தில் கடுமையாக கூடிய எடை உடற்பயிற்சி செய்து WEIGHT LOSS செய்த ஆர்யாவின் மனைவி சாயீஷா..!!!

சாயிஷா தமிழ் சினிமாவிற்கு நன்றாக நடனமாட தெரிந்த நடிகை நீண்ட வருடங்களுக்கு பிறகு கிடைத்து இருக்கிறார் என்பது உண்மை. தமிழில் எல் விஜய் இயக்கிய வனமகன் என்ற படத்தில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சாயிஷா அந்தப் படத்தில் இவர் ஆடிய நடனத்தைப் பார்த்து அசந்து போனார்கள் ரசிகர்கள்.

அந்த அளவிற்கு உடலில் உள்ள ஒவ்வொரு பகுதிகளும் ஆடும் படி இவருடைய நடனம் இருந்தது. தமிழில் நன்றாக நடனம் ஆடக் கூடிய நடிகைகள் மிகக் குறைவு அதனால் சாயிஷாவின் நடனத்தை ரசிகர்கள் பெரிதாக ரசித்து வந்தார்கள்.

வனமகன் படத்திற்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் கார்த்திக் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சாயிஷா. அந்தப் படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. விஜய் சேதுபதியுடன் ஜூங்கா என்ற படத்தில் நடித்தவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த என்ற படத்தில் நடித்திருந்தார்.

கஜினிகாந்த படத்தில் ஆர்யாவும் சயீஷாவும் நெருங்கிய நண்பர்களானார்கள் அதன்பின் காப்பான் என்ற படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் சாயீஷா. அதே படத்தில் ஆர்யாவும் நடித்திருந்தார் ஆர்யா ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெண் தேடும் படலத்தை ஆரம்பித்தார் 15 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் பழகி பார்த்து கடைசியில் மூன்று பெண்களை தேர்வு செய்து அந்த மூவரில் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியிருந்தார் ஆனால் கடைசியில் அந்த மூன்று பெண்களுக்கும் டாட்டா காட்டிவிட்டு தீராத விளையாட்டு பிள்ளை விஷால் போல எஸ்கேப் ஆனார் அதன்பின் நடிகை சாயீஷாவை காதலித்து வந்த ஆர்யா 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தற்போது ஆர்யா சாயிஷா தம்பதியினருக்கு அரியனா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

புனித் ராஜ்குமாரின் கடைசி படமான யுவரத்தினா என்ற படத்தில் புனித் அவர்களுக்கு ஜோடியாக சாயீஷா நடித்து இருந்தார்.

கர்ப்ப காலத்தில் உடல் எடை கூடி போய் கொஞ்சம் குண்டாக இருந்த சாயீஷா அப்படியே இருந்தால் படங்களில் நடிக்கும்போது கஷ்டமாக இருக்கும் என்று தற்பொழுது கடினமான உடற்பயிற்சிகளை தினமும் செய்து WEIGHT LOSS செய்துள்ளார்.

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து தனது உடலை ஃபிட்டாக வைத்துள்ள சாயீஷா புகைப்படத்தை வெளியிட்டதோடு அதில் அவர் பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பது எளிதல்ல இருப்பினும் ஒருவர் சீராகும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்றால் உடல் எடையை குறைப்பது நல்லது. ஏனெனில் இது உள்ளுறுப்பு கொழுப்பிலிருந்து நமது உறுப்புகளை விடுவிக்கிறது ஆரோக்கியமாக இருப்பது தான் இலக்காக இருக்க வேண்டும் அதற்கு நேரம் எடுக்கும் ஒரு பிரபலத்தை பார்த்து உங்கள் இலக்கை மட்டும் அமைக்காதீர்கள் ஒவ்வொரு நபரும் வெவ்வேறு உடல் மற்றும் ஆரோக்கிய நிலை உள்ளது என்று பதிவிட்டு உள்ளார்.

அனைவரும் தினமும் தங்களால் முடிந்த உடற்பயிற்சி செய்யுங்கள் என்று கூறி உள்ளார் சாயீஷா.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles