சாயிஷா தமிழில் முதல் முதலாக அறிமுகம் ஆனது ஜெயம்ரவி நடித்த “வனமகன்” என்ற படத்தில் தான். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். முதல் படத்திலே அவர் ஆடிய நடனம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பை காட்டிலும் நடனத்தில் பின்னி பெடல் எடுப்பதால் இவர் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று தமிழ் சினிமா ரசிகர்களை எதிர்பார்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாண்டியராஜ் அவர்களின் இயக்கத்தில் கார்த்தியுடன் “கடை குட்டி சிங்கம்” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து சாயிஷாவிற்கு தமிழ் படவாய்ப்புகள் குவிந்தது. சில படங்கள் தமிழில் நடித்து கொண்டு இருந்தார் ஆர்யாவுடன் “கஜினிகாந்த” என்ற படத்தில் ஜோடியாக நடித்தார். அங்கு ஆரம்பித்த ஆர்யா சாயிஷா நட்பு காதலாக மாறியது. ஆர்யாவும் ஒரு தொலைக்காட்சி வழியாக “எங்க வீட்டு மாப்பிளை” என்ற நிகழ்ச்சி மூலம் தனது வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்கிறேன் என்று கூறி 15 பெண்களை தேர்ந்து எடுத்து அதில் அனைவருடன் பழகி பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக ரிஜெக்ட் செய்து கடைசியில் 3 பெண்களை தேர்ந்து எடுத்து இந்த மூவரில் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி கடைசியில் டாட்டா கட்டிய கதை ஊர் அறிந்த ஒன்றே.
அந்த சமயத்தில் “காப்பான்” திரை படத்தில் மறுபடியும் சாயிஷாவுடன் நடித்து கொண்டு இருந்தார் ஆர்யா. அந்த நேரத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினர். அதன் பின் நடிகர் சூர்யா ஆர்யாவிற்கு நிறைய அறிவுரைகளை வழங்கி உள்ளார். அதன் பின் சில நாட்களில் இருவரும் காதலிப்பதை வெளியில் சொன்னார்கள். இரு குடும்பத்தார் சம்மதத்துடன் ஆர்யாவும் சாயிஷாவும் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின் இருவரும் வெளிநாடுகளில் சுத்திவருகின்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்தன.
தற்பொழுது ஆர்யாவின் மனைவி சாயிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் உடை அணியாமல் பிகினி உடையுடன் நீச்சல் குளத்தில் கூலாக போஸ் கொடுத்து இருப்பது போல இருந்தது. இதை புகைப்படத்தை பார்த்த ஆர்யாவின் மாமியார் ஹாட் சிமிலி ஒன்றை போட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வர வர ஓவரா போறிங்கனு கமெண்ட் செய்து வருகின்றனர்.