Monday, May 20, 2024
-- Advertisement--

கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த பிரபல நடிகரின் மனைவி..!!! அதிர்ச்சியில் திரையுலகம்.

தமிழ் சினிமாவில் இயக்குனர், பாடலாசிரியர், நடிகர், பாடகர் போன்ற பல பரிமாணங்களில் திகழ்பவர் அருண்ராஜா காமராஜ் அவர் தமிழ் சினிமாவில் கனா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள் இவர் ஜிகர்தண்டா, தெறி, கபாலி, பைரவா போன்ற படங்களுக்கு பாடலாசிரியராக இருந்துள்ளார் சில பாடல்களும் பாடியுள்ளார்.

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படத்தில் நெருப்புடா என்ற பாடல் பெரிதளவில் ஹிட்டானது அதனை தொடர்ந்து வரலாம் வரலாம் வா பைரவா என்ற பாடல் அருண்ராஜா காமராஜ் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

ராஜா ராணி, மான் கராத்தே, பென்சில், மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்துள்ளார் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் அருண்ராஜா காமராஜ்.

இந்நிலையில் அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா ஒரு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இந்த செய்தியை கேட்டு ப்ரியா அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் நாம் தற்காத்து கொள்ள வாங்க வேண்டிய பொருட்கள்

மேலும் அருண்ராஜா காமராஜ் மனைவி மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அருண்ராஜா காமராஜ் அவர்களின் மறைந்த மனைவிக்கு வயது 38 . இந்த வயதில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்து இருப்பது திரைதுரையில் பெரும் வருத்தத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles