Saturday, May 18, 2024
-- Advertisement--

நயன்தாராவுக்கே டப் கொடுக்கும் சின்னத்திரை நயன்தாரா…!!! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் அறந்தாங்கி நிஷா. இந்த நிகழ்ச்சி மூலம் தமிழகம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார்.

கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் அடிக்கடி விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் வந்து அசத்தி செல்கிறார். இந்நிலையில் சின்னத்திரை நயன்தாரா என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு வருகிறார். இதனை ரசிகர்கள் உங்கள் அலப்பறைக்கு முடிவே இல்லையா என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக வந்து நிகழ்ச்சியை வேற லெவலுக்கு எடுத்து செல்கிறார். எப்போதுமே ஜாலியாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது நிஷா தன்னை நயன்தாராவோடு ஒப்பிட்டு ரசிகர் வெளியிட்ட புகைப்படத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதோடு பில்லா 2வில் நயன்தாரா போல் கருப்பு கலர் கோட் சூட் போட்டு புகைப்படத்தை ரசிகர்கள் ஒப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர். இதனைக் கண்ட ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளிட்டு “யாரும் கோவப்படக் கூடாது.. இத நான் ரெடி பண்ணல எனக்கு அனுப்புங்க நல்லதா இருந்துச்சு..” என பகிர்ந்து உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles