Saturday, May 4, 2024
-- Advertisement--

எளிமையாக நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் நிச்சயதார்த்தம்…!!! தன் படத்தில் பணியாற்றியவருக்கே மகளை திருமணம் செய்து கொடுக்கும் இசைப்புயல்..

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக பயணத்தைத் தொடங்கினார். இவர் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் பாடலுக்கு இசை அமைத்துள்ளார். இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

அதோடு ஏ.ஆர்.ரகுமானின் மகளுக்கு மிகவும் எளிமையாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் ஏ.ஆர்.ரகுமானின் மருமகன் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஏ ஆர் ரஹ்மானுக்கு அமீன் என்ற மகனும், கதீஜா ரஹ்மான், ரெஹீமா ரகுமான் என்ற இரு மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமானின் மூத்தமகள் கதீஜாவிற்கு கடந்த டிசம்பர் 29ஆம் தேதி எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். ஏ.ஆர்.ரகுமானின் மருமகனாக வருபவரின் பெயர் ரியாஸ். அவர் மகள் கதீஜா தற்போது வருங்கால கணவரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இன்னும் திருமண தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும் ரகுமானின் மகள் கதீஜா தனது பிறந்தநாள் டிசம்பர் 29 தேதி அன்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதோடு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்று கூறியுள்ளார்.

கதீஜவை திருமணம் செய்ய உள்ள மணமகன் ரியாஸ் சவுண்ட் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இதில் சிறப்பம்சமாக ஏ.ஆர்.ரகுமான் படத்திலேயே ரியாஸ் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘தாமாஷா’ என்ற ஹாலிவுட் படத்தில் ரியாஸ் பணியாற்றியிருக்கிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles