Saturday, May 4, 2024
-- Advertisement--

கிராமி விருது வழங்கும் விழாவில் மகனுடன் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான்…!!! வைரலான செல்பி புகைப்படம்.

கிராமி விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மகனுடன் பங்கேற்றுள்ளார். கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான 64ஆவது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் உள்ள எம்ஜிஎம் கிராண்ட் கார்டன் அரேனாவில் கோலாகலமாக நடைபெற்றது.

Indian composer A.R. Rahman performing in Mumbai in February 2014.

இந்த விருது விழாவில் ஏராளமான இசை கலைஞர்களும், இசை பிரபலங்களும் கலந்து கொண்டனர். வருடந்தோறும் ஜனவரி மாதம் இறுதியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தாமதமாக நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் பிரபல காமெடியன் நடிகருமான டிரெவோர் நோவா (Trevor Noah) தொகுத்து வழங்கினார்.

மேலும் இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதோடு அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் பங்கேற்றார். விருது வழங்கும் விழாவில் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இருவரும் இணைந்த செல்ஃபி புகைப்படத்தையும் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles