Sunday, May 19, 2024
-- Advertisement--

ஒட்டு துணி இல்லாமல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட நடிகர்…!!! பர்ஸ்ட் லுக் பார்த்த அனுஷ்கா என்ன கூறி உள்ளார் தெரியுமா..?

விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவின் சாக்லேட் பாய். 2011 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். அர்ஜுன் ரெட்டி இந்த திரைப்படம் தான் விஜய் தேவரகொண்டாவிற்கு பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

பிறமொழி ரசிகர்கள் கூட அர்ஜுன் ரெட்டி படத்தை பார்த்து ரசித்தார்கள் அதனை தொடர்ந்து கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். அந்த படமும் பெரிய அளவில் ஹிட் ஆனது. தமிழில் நோட்டா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார் விஜய் தேவரகொண்டா .

தற்பொழுது விஜய் தேவரகொண்டா நடித்து வரும் படம் தான் லைகர் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கையில் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த போஸ்டரில் விஜய் தேவர் கொண்டா ஒட்டு துணி இல்லாமல் கையில் ஒரு பூங்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

சமீப காலமாக இது போன்ற புகைப்படங்கள் ஹிந்தி படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் வெளியிட்டு வந்தார்கள் குறிப்பாக பிகே படத்திற்காக அமீர்கான் இதுபோன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். தற்பொழுது விஜய் தேவரகொண்டா இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தில் பூரி ஜெகநாத் இயக்கி உள்ளார் மணிசர்மா இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற August 25ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் அவர்களின் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய் தேவரகொண்டாவின் இந்த புகைப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் நிலையில் பிரபல நடிகை அனுஷ்கா அவர்கள் இந்தப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles