Sunday, May 19, 2024
-- Advertisement--

சமந்தாவை தொடர்ந்து அனுஷ்காவுக்கு இப்படி ஒரு வியாதியா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவின் நம்பர் ஒன் நடிகை அனுஷ்கா. திரிஷா, நயன்தாரா வரிசையில் அனுஷ்காவும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய நடிகைகளின் ஒருவரும் அனுஷ்கா.

  கொடி இடை அழகி அனுஷ்கா ,  இவர் மெல்லிய இடையினாலயே பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது.  இப்படி தன் உடல் எடையை சிக்கன வைத்திருந்த அனுஷ்கா .  இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை மடமடவென உயர்த்தினார். இதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்பு குறைந்தது.  உடல் எடையும் குறைக்க முடியாமல் கடந்த இரு ஆண்டுகளாக கைவிட்டு எண்ணக்கூடிய அளவிலே படங்களில்  நடித்து இருந்தார்.

தற்பொழுது மீண்டும் தன் உடல் எடையை சிக்கனமாற்றி பட வாய்ப்பு தேடி வரும் அனுஷ்கா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் இவருக்கு சிரிப்பு வந்தால் அதை அடக்கவே முடியாதாம். குறைந்தது 15 நிமிடம் ஆவது இவர் சிரித்துக்கொண்டே இருப்பாராம். ஆரம்பத்தில் இது சாதாரண விஷயம் தான் என்று எண்ணியிருந்த அனுஷ்காவிற்கு போகப்போக தான் சிரிப்பை நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என்பது சீரியஸான விஷயம் என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற அனுஷ்கா, இது ஒரு வியாதி என்று மருத்துவர் கூறியுள்ளார். இதற்கான சிகிச்சையில் தற்போது ஈடுபட்டு வருகிறாராம் நடிகை அனுஷ்கா. சமீபத்தில் தான் ஸ்ருதிஹாசன், சமந்தா போன்றோர் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

அதனை தொடர்ந்து முன்னணி நடிகையான அனுஷ்காவுக்கு இப்படி ஒரு வியாதி உள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த வியாதியினால் அனுஷ்காவின் படப்பிடிப்பு பல நேரங்களில் நின்று உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles