Wednesday, May 8, 2024
-- Advertisement--

சந்திரமுகி2 படத்தில் நடிக்கப்போகும் முன்னணி நடிகை..!!! அப்போ ஜோதிகா இல்லையா? வெளியான சூப்பர் தகவல்.

சந்திரமுகி மலையாளத்தில் 1993 ஆம் ஆண்டு மணிசித்தரதாலு என்ற படத்தை இயக்குனர் பாசில் அவர்கள் இயக்கி இருந்தார் அந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிகை சோபனா ஆகியோர் நடித்திருந்தனர்.

அதே படத்தை கன்னடத்தல் பி வாசு அவர்கள் ஆப்தமித்ரா என்ற பெயரில் ரீமேக் செய்து இருந்தார். இயக்குநர் பி வாசுவின் ஆப்தமித்ரா கன்னடத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய பிளான் செய்தனர். ரஜினிக்கு அந்த நேரத்தில் சரியான ஒரு ஹிட் படம் தேவைப்பட்டதால் ஆப்தமித்ரா தமிழ் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்தார்.

அந்தப் படம்தான் சந்திரமுகி என்ற பெயரில் தமிழில் வெளியானது. சந்திரமுகி மாபெரும் வெற்றிப்படமாக ரஜினிக்கு அமைந்தது கிட்டத்தட்ட 900 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வசூல் சாதனை செய்தது சந்திரமுகி.

குறிப்பாக இந்தப் படத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருந்தார். முதலில் அந்த கதாபாத்திரத்திற்கு ரஜினி ஐஸ்வர்யாராய்யை சிபாரிசு செய்தார் ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காததால் படக்குழுவினர் ஜோதிகாவை தேர்வு செய்தனர்.

ஜோதிகா இதுபோல கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் ரஜினியிடம் இருந்தது ஆனால் படத்தின் அவர் OUTPUT பார்த்த ரஜினி மிரண்டுபோய் ஜோதிகாவை பாராட்டினாராம். கிட்டத்திட்ட சந்திரமுகி ஆகவே வாழ்ந்து இருப்பார் ஜோதிகா.

சந்திரமுகி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சந்திரமுகி2 எப்போது வரும் என்ற கேள்வி அடிக்கடி ரசிகர்களிடம் நிலவி வந்தது. நீண்ட நாள் ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் சந்திரமுகி இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லை இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தது அதனால் சந்திரமுகி பாகம்-2லும் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடிக்கப்போவது அனுஷ்கா என்று செய்திகள் வெளிவந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி வாசு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படம் கண்டிப்பாக சந்திரமுகி முதல் பாகம் போல மாபெரும் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்பதில் உறுதியாக உள்ளனர் படக்குழுவினர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles