Monday, May 20, 2024
-- Advertisement--

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் மோதும் சிம்பு..!!! செம கோபத்தில் ரஜினி ரசிகர்கள்..!!!

அண்ணாத்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு இது மாபெரும் வெற்றிப் படமாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கும் படக்குழு படத்தை தீபாவளி தினத்தன்று வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. விஸ்வாசம் படத்தை பார்த்த ரஜினி சிறுத்தை சிவாவிடம் தனக்காக கதை ஒன்றை ரெடி செய்யுங்கள் என்றும் அது குடும்ப சென்டிமெண்ட் கலந்த கதையாக இருக்கட்டும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியானது நாம் அறிந்த ஒன்றே. படக்குழுவினர் தரப்பில் அண்ணாத்த கண்டிப்பாக குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு வெளி வந்த முந்தைய படங்கள் பெரிதாக வெற்றியை தரவில்லை கண்டிப்பாக இந்தப் படம் பெரிய வெற்றியை ரஜினிக்கு கொடுக்கும் என்ற பெரிய நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு. அண்ணாத்த படத்தில் மாஸ்ஸான ரஜினி குடும்ப சென்டிமென்ட் என்று தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வர இருக்கும் நிலையில் அண்ணாத்த படத்திற்கு போட்டியாக தீபாவளிக்கு களமிறங்கும் மற்றொரு படம் மாநாடு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்து வரும் படம் தான் மாநாடு. மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு பெரிய திருப்புமுனை கொடுக்கும் என்று படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் கூறியிருந்தார் அதுமட்டுமல்லாமல் படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் இந்த படத்திற்கு பிறகு சிம்பு வேறொரு பரிமாணத்திற்கு செல்வார் என்றும் கூறியிருந்தார்.

படத்தை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டு மாநாடு தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்து உள்ளார்கள். அண்ணாத்த படம் ஏற்கனவே தீபாவளிக்கு வர இருக்க தளத்தில் மாநாடு படமும் இறங்கி இருப்பது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. ரஜினி படத்திற்கு அதிக திரையரங்குகள் வாங்கி முதல் நாள் வசூல் சாதனை செய்வார்கள் என்று எதிர் பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு சிம்பு படம் வருவது சற்று டென்ஷன் தான்.

இந்த தீபாவளிக்கு போட்டி சூப்பர் ஸ்டாருக்கும் லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கும் தான்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles