Monday, November 11, 2024
-- Advertisement--

கல்வி கட்டணம் செலுத்தவில்லை எனில் பெயர் நீக்கம்..! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பால் அதிர்ச்சி..!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் இன்னமும் திறக்க படாமலேயே இருக்கிறது. கல்வித் துறை அமைச்சரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பள்ளிகளில் ஆன்லைன் கிளாஸ் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரிகளிலும் இதேபோல ஆன்லைன் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கல்வி கட்டணத்துடன் நூலகம், கல்லூரி வளர்ச்சி ஆகியவற்றிற்கான கட்டணத்தையும் சேர்த்து இந்த மாதம் இறுதிக்குள் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளது. கட்டத் தவறினால் அபராதத்துடன் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செப்டம்பர் 5 க்குள் கல்வி கட்டணம் செலுத்த தவறிய மாணவர்கள் படிப்பை தொடர விருப்பம் இல்லை என்று கருதப்பட்டு பெயர் நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் மூடப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. அப்படி இருந்தும் பயன்படுத்தாது ஆய்வகங்கள் மற்றும் நூலகத்திற்கு பயன்பாட்டுக் கட்டணம் வசூலிப்பது ஏன் என்று மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles