Sunday, May 19, 2024
-- Advertisement--

ஏதோ IT Park என எண்ண வேண்டாம்…!!! கலைஞர் உருவாக்கிய அரசு நூலகம். ஆசியாவிலே பெரிய நூலகத்தின் தற்போதைய நிலை..!!! சீரமைப்பாரா ஸ்டாலின்.

சென்னையில் இப்படி ஒரு நூலகம் உள்ளதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சாப்ட்வேர் கம்பெனி போல தோற்றம் அளிக்கும் அழகிய நூலகம் ஒன்று உள்ளது. நூலகத்தில் ஏராளமான நூல்கள் மக்கள் படித்து தெரிந்து கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் கலைஞர் அவர்களால் திறக்கப்பட்ட நூலகம் இங்கு சென்றால் ஏகப்பட்ட புத்தகங்களை ஒரே இடத்தில் படிக்கலாம்.

பிரம்மாண்டமான அறைகள் மற்றும் புத்தகங்களை அமர்ந்து படிக்கும் இடங்கள் இருக்கும் இந்த நூலகத்தில் கண் தெரியாதவர்கள் செவிவழி புத்தகங்களைப் படிப்பதற்காக சில ஏற்பாடுகளும் செய்துள்ளனர்.

ஆசியாவிலேயே பெரிய நூலகத்தில் ஒன்றான இந்த அண்ணா சென்சரி நூலகம் தற்பொழுது அதனை யாரும் கண்டுகொள்ளாமல் பராமரிப்பு சரியில்லாமல் இருக்கிறது. ஒன்பது மாடிகளை கொண்ட இந்த கட்டிடம் 2010ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது தற்போது 6.10 லட்சம் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன ஒவ்வொரு நாளும் சுமார் 1250 பேர் இந்த நூலகத்திற்கு வருவதாக தகவல்.

அப்பேர்பட்ட நூலகத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இந்த நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற முயற்சி செய்தார் ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த நூலகம் மருத்துவமனையாக மாற்றவில்லை.

ஆடிட்டோரியம், கலந்துரையாடும் அறை, புத்தகம் வெளியிடும் அறை போன்ற வசதிகள் இந்த நூலகத்தில் உள்ளது. ஸ்டாலின் அவர்களின் தந்தை கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்ட நூலகம் சரியான பராமரிப்பு இல்லாமல் இயங்கி வருகிறது. பலர் தங்களது அறிவை வளர்த்துக் கொள்ள தயார் செய்த நூலகம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதே என்று அனைவரும் வேதனைப்பட்டு வருகின்றனர்.

தந்தை கொண்டுவந்த நூலகத்தை சீரமைப்பாரா ஸ்டாலின் பொறுத்திருந்து பார்ப்போம்.

Address : Gandhi Mandapam Rd, Surya Nagar, Kotturpuram, Chennai, Tamil Nadu 600085

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles