Friday, May 3, 2024
-- Advertisement--

மன்னார்குடியில் குத்தாட்டம் போட்ட அனிதா சம்பத்…!!! அதுவும் யார் பாடலுக்கு தெரியுமா..!!!

அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து தனக்கென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தவர். யாருடா இந்த பொண்ணு பார்க்க ஹோம்லியா அழகா இருக்காங்க என்று இளசுகளுக்கு இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய போதே இவர் மீது ஒரு பெரிய CRUSH உண்டு.

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி அனிதா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சினிமாவில் நடித்து வந்தார் விஜய்யின் சர்கார் படத்தில் செய்திவாசிப்பாளர் ஆகவும், சூர்யாவின் காப்பான் படத்தில் சூர்யாவை பேட்டி எடுக்கும் பெண்ணாகவும் நடித்திருப்பார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அனிதா சம்பத். நடிகர் விமலுக்கு தங்கையாக நடித்து வருகிறார். விரைவில் அந்த திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் பிபி ஜோடிகளில் கலந்துகொண்டு வின்னர் டைட்டிலையும் பெற்றார்.

அடிக்கடி தனது காதல் கணவருடன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வந்த அனிதா சமீபத்தில் வீடு ஒன்றை கட்டி அதில் குடியேறி இருக்கிறார். அனிதாவின் புதுமனை புகுவிழாவிற்கு பல பிரபலங்கள் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வந்துள்ளனர்.

அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் அனிதா நேற்று மன்னார்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ளார் அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் அனிதா.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles