ஆண்ட்ரியா சிறந்த பாடகர் மற்றும் நடிகை. இவர் நடித்த முதல் படமான “பச்சைக்கிளி முத்துச்சரத்தில்” ரசிகர்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். ஆனால் அந்த படத்திற்கு முன் சினேகாவின் கணவர் பிரசன்னா ஹீரோவாக நடித்த “கண்ட நாள் முதல்” என்ற படத்தில் ஆண்ட்ரியா அறிமுகம் ஆகிவிட்டார்.
அதனை தொடர்ந்து கார்த்தியின் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா”, “ஒரு கல் ஒரு கண்ணாடி” போன்ற வெற்றி படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா இசையமைப்பாளர் அனிருத்துடன் காதல் கொண்டார். தன்னுடன் சிறு வயதான அனிருத்தை காதலித்து வந்த ஆண்ட்ரியா திடீர் என்று பிரிந்தார்கள். அனிருத்துடன் ஆண்ட்ரியா எடுத்துக்கொண்ட லிப்லாக் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது.
அதன் பின் ஒரு அரசியல் வாரிசு உடன் காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக சுற்றி வந்து உள்ளனர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன பின்னும் ஆண்ட்ரியாவை காதலித்து வந்தார். ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருந்து அதன் பின் சில பிரச்சனைகளால் ஆண்ட்ரியா கைவிடப்பட்டார். ஆண்ட்ரியா அவருடைய வாழ்கை பயணம் பற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதில் இந்த விஷயத்தை பற்றி சொல்லி இருப்பதாக அவரே கூறி இருந்தார். ஆனால் அந்த புத்தகத்தை ஒரு சிலர் வெளியிட முடியாமல் செய்தனர். சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஆண்ட்ரியா தற்பொழுது தளபதி விஜயின் “மாஸ்டர்” படத்தில் ஒரு நல்ல ரோலில் நடித்து இருக்கிறார்.
தற்பொழுது ஆண்ட்ரியா பிரபல NOKIA செல்போன் நிறுவனம் வெளியிட்டு உள்ள செல்போன் பற்றி review கூறி உள்ளார். அதில் இந்த செல்போன் சீனா தயாரிப்பு இல்லை என்றும் ஸ்பீக்கர் மற்றும் பேட்டரி லைப் அருமையாக உள்ளதாக கூறியுள்ளார். ரசிகர்களை அனிருத்துடன் எடுத்த செல்பி புகைப்படம் இருக்க என்று களைத்து வருகின்றனர்.