Thursday, May 9, 2024
-- Advertisement--

தனது பாட்டி போல ஆச்சு அசல் மாறிய ஆண்ட்ரியா..!!! வெளியான புகைப்படம்.

ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் என்ற ஒரு படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடிகர் சரத்குமார் அவர்களுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்தப்படத்தில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கிய ஆண்ட்ரியா மலையாள படங்களிலும் நடித்து வந்தார். ஆயிரத்தில் ஒருவன் மங்காத்தா விஸ்வரூபம் போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா முதலில் வயதில் மிகக்குறைவான இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து வந்தார். அனிருத் ஆண்ட்ரியா உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போல் புகைப்படம் இணையத்தில் பரவியது. நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவ தொடங்க அனிருத் வீட்டில் ஒரு பூகம்பமே வெடித்தது.

அதன்பின் ஆன்ட்ரியாவும் அனிருத்தும் பிரிந்தார்கள். அதனை தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளில் பாடி வந்த ஆண்ட்ரியா பிரபல அரசியல் வாரிசு ஒருவரை காதலித்து வந்துள்ளார் அந்த அரசியல் வாரிசுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாம். அந்த அரசியல் வாரிசு ஆசை காட்டி தன்னை காதலித்து ஏமாற்றி விட்டார் என்று சமீபத்தில் ஆண்ட்ரியா கூறியிருந்தார்.

தொடர் காதல் தோல்வியால் மனமுடைந்த ஆண்ட்ரியா சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் சற்று விலகி இருந்தார். தற்பொழுது ஆண்ட்ரியா மறுபடியும் மாஸ்டர் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் தளபதி விஜயுடன் நடித்துள்ளார் அந்த புகைப்படம் ஆண்ட்ரியாவின் பிறந்த நாள் அன்று இணையத்தில் வைரல் ஆனது அனைவரும் அறிந்த ஒன்றே.

தற்பொழுது ஆண்ட்ரியா இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் மிஸ்கின் ஆண்ட்ரியாவிடம் பிசாசு 2 படத்தின் கதையைக் கூறியிருக்கிறார் அப்பொழுது அவர் கூறிய கதாபாத்திரத்திற்காக தனது பாட்டியின் புகைப்படத்தை மிஷ்கினுக்கு அனுப்பியுள்ளார் ஆண்ட்ரியா.

அந்தப் புகைப்படத்தை பார்த்த மிஸ்கின் இந்த கதாபாத்திரத்திற்கு உங்கள் பாட்டியின் கெட்டப் நன்றாக இருக்கும் என்று ஆண்ட்ரியாவை அவரது பாட்டி போல மாற்றி போட்டோசூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தான் ஆண்ட்ரியாவின் பிறந்தநாள் அன்று பிசாசு படக்குழுவினர் வெளியிட்டு உள்ளார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles