Sunday, April 28, 2024
-- Advertisement--

ஆண்ட்ரியாவுடன் காதல் முறிந்ததிற்கு காரணம் இது தான்..!!! பல நாள் உண்மையை ஓபன் ஆக போட்டு உடைத்த அனிருத்..!!!

அனிருத் தனுஷின் 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் ராக்ஸ்டார் ஆக வளர்ந்து உள்ளார். அனிருத் பொருத்தவரை அவருடைய இசையில் இந்த கால இளைஞர்களுக்கு ஏற்றதுபோல BEAT சாங் இருக்கும் ஒரு அழகான இளையராஜா சாயல் மெலோடியும் இருக்கும். சில படங்கள் சுமாராக இருந்தாலும் அனிருத் பின்னணி இசையில் மிரட்டி அந்த படத்தின் தரத்தை உயர்த்துவார் இந்த விஷயத்தில் அனிருத் பெரிய கெட்டிக்காரர் தான்.

முதலில் பிரபல பாடகி மட்டும் நடிகையான ஆண்ட்ரியாவை காதலித்து வந்தார். ஆன்ட்ரியாவும் அனிருத்தும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் காதலித்து வந்த விஷயம் ஊருக்கே தெரிய வைத்தது சுசி லீக்ஸ் தான். பாடகி சுசித்ரா வெளியிட்ட புகைப்படம் அனிருத் வீட்டில் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது. சுஜி லீக்ஸ் புகைப்படத்தில் அனிருத் ஆண்ட்ரியா லிப்லாக் புகைப்படங்களும் வெளியானது.

சில வருடங்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு நான் காதலிச்சவங்க நல்லா பாடுவாங்க என்று கூறினார். பெயர் சொல்லலாமா என்று கேட்க அவங்க பெயர் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவுக்கு 25 வயதான போது எனக்கு 19 வயது என்னைக்கு விட ஆறு வயது மூத்தவர். தற்போது எங்களது காதல் பிரேக் அப் ஆகிவிட்டது. அதற்குக் காரணம் வயது மூப்பு தான் என்று கூறியிருக்கிறார். அது காதல் என்று சொல்லமுடியாது என்றும் கூறி இருந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார் மற்றும் ஜோனிதா காந்தியை காதலிக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது ஆனால் கீர்த்தி சுரேஷ் ஜோனிதா காந்தி இவர்கள் இருவருமே அனிருத்துக்கு நெருங்கிய தோழிகளை தவிர வேறு எந்த ஒரு விஷயமும் இல்லை என்கிறார்கள் சினி வட்டாரத்தினர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles