Friday, May 17, 2024
-- Advertisement--

15 நிமிடத்தில் கொரோனா காலி..!!! ஆந்திராவை கலக்கும் நாட்டுமருந்துவர்..!!! படையெடுக்கும் மக்கள்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கொரோனவால் பாதித்தவர்களுக்கு நாட்டு வைத்தியம் மூலம் 15 நிமிடங்களில் குணப்படுத்துவதாக அறிவிப்புகள் வெளியாகின இந்த மருந்தை இலவசமாக மக்களுக்கு கொடுக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கிருஷ்ணாபட்டினம் கிராமத்தில் ஆனந்தையா என்பவர் நாட்டு மருத்துவம் செய்து வருகிறார் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியபோது அவரைத் தேடி செல்லும் மக்களுக்கு கட்டணம் இல்லாமல் நாட்டு மருந்து தயாரித்து கொடுத்துள்ளார் இதில் நல்ல பலன் கிடைத்ததாக கூறப்படுகிறது.

தற்போது இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நாட்டு மருந்து தயாரித்து நாளொன்றுக்கு 500 பேருக்கு இலவசமாக கொடுத்து வருகிறார் இந்த தகவல் ஆந்திரா மாநிலம் முழுவதும் பரவியதால் பல்வேறு இடங்களில் இருந்து கூட்டம் கூட்டமாய் வரத்தொடங்கினர்.

நாளொன்றுக்கு 500 பேர் என்ற நிலை மாறி 1000 , 2000 , 3000 என மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது அதனை அறிந்த மாவட்ட காவலர் கூட்டம் அதிகம் சேர்வதால் தொற்று அபாயம் காரணத்தினால் மருந்து வாங்க மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது அப்பொழுது ஆய்வுக்குழு நாட்டு மருந்தை பரிசோதித்ததில் இதில் எந்தவித அபாயமும் இல்லை என தெரிவித்துள்ளது அதனால் மீண்டும் மருந்து வழங்க அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலம் கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வரத்தொடங்கினர் அதேசமயம் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வெளிவந்து நாட்டு மருந்து பெற்றுக்கொண்டு செல்கின்றனர் ஆகையால் அந்த கிராமமே போக்குவரத்து நெரிசல் இருக்கும் அளவிற்கு வாகனங்கள் வந்து செல்கின்றன அதனை அறிந்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து ஆனந்தையா அவர்களை சந்தித்து நாட்டு மருந்தை பற்றியும் கேட்டறிந்தனர்.

அப்பொழுது தெலுங்கானா மாநிலம் பெதபள்ளியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தொற்றுவிக்கப்பட்டு மூச்சு விட முடியாமல் தவித்து வந்தார் அதனை அறிந்த ஆனந்தையா குடும்பத்தினர் அந்த இளைஞன் கண்ணில் சொட்டு மருந்து இட்டனர் அதை தொடர்ந்து 15 நிமிடத்தில் அந்த இளைஞருக்கு மூச்சு பிரச்சனை குறைந்து விட்டதாக கூறியுள்ளார் இதனை அங்கிருந்த எதிர்க்கட்சித் தலைவர் நேரில் கண்டு ஆனந்தையா தயாரித்த நாட்டு மருந்து ஆயுஷ் அமைச்சகம் அங்கீகரிக்கப்பட்டதாகும் ஐ சி எம் ஆர் என்ற நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும் கூறி உள்ளார்.

இதனை தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி விரைவில் பரிசீலனை செய்து நாட்டு மருந்து மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles