தெலுங்கு உலகில் பிரபல சீரியல் நடிகை சாந்தி என்கிற விஷ்வாசாந்தி. இவர் நடிகை மட்டுமன்றி தொகுப்பாளரும் கூட. இவர் ஆந்திராவில் உள்ள எல்லரெட்டிக்குடா என்ற பகுதியில் ஒரு காலனியில் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.
ஆனால் சில நாட்களாக இவரது வீடு உட்புறமாக பூட்டப்பட்டுருந்த நிலையில் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகப்பட அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
சாந்தி இறந்துகிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என போலீஸார் தேடினர். ஆனால் ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.
அவர் உடல் உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் அறிக்கை வந்த பிறகு தான் உண்மை என வென்று தெரிய வரும். இவரின் இறப்பு செய்தி கேட்டு திரை உலகமே அதிர்ச்சியில் உள்ளது.
